Monday, April 23, 2012

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART – 12

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART – 9 & 10

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 9

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 7 & 8

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 7

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 6

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 5

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 3

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 2

நூரே முஹம்மதிய்யா (ஸல்) முதல் ஷபாஅத்தே முஹம்மதிய்யா (ஸல்) வரை PART - 1

Tuesday, April 10, 2012

வானில் முழு மதியைக் கண்டேன்...

ராகம் - வானில் முழு மதியைக் கண்டேன்

நாயகனே நபியைத் தந்தான்
நபிவழியே மறையைத் தந்தான்
நபிவாழ்ந்த வழியில் வாழ்ந்தால்
நாளை நமக்கு சுவனம் என்றான்
                                                                ( நாயகனே)
ஈமானை இயம்பிடு என்றான்
இஸ்லாத்தில் இணைந்திடு என்றான்
ஈமானுடன் இறப்பவர்க்கெல்லாம்
இறுதியிலே ஜெயமே என்றான்
                                                                    ( நாயகனே)
தக்வாவில் ஒழுகிடு என்றான்
தவறாமல் தொழுதிடு என்றான்
தக்வாவுடன் தொழுபவர்கன்றோ
தன்னளவில் கண்ணியம் என்றான்
                                                                            ( நாயகனே)
நோன்பை நோற்க வேண்டும் என்றான்
நோய் நொடிகள் விலகும் என்றான்
நோன்பை திறக்கும் வேளை கேட்டால்
நோக்கம் நிறைவேறும் என்றான்
                                                                  ( நாயகனே)
ஈகை கொடுத்தால் மேன்மை என்றான்
ஈட்டும் பொருளின் தூய்மை என்றான்
ஈகை கொடுக்கும் மேன்மை பொருட்டால்
ஈடேற்றம் நிச்சயம் என்றான்
                                                                       ( நாயகனே)
புனித ஹஜ்ஜஶம் கடமை என்றான்
புறப்பட்டு வருவாய் என்றான்
புனிதம் முடிந்து புறப்படும் நேரம்
புதியதாய் நீ பிறப்பாய் என்றான்
                                                                           ( நாயகனே)
சாத்தான் வழி தவிர்திடு என்றான்
சன்மார்க்கம் பேணிடு என்றான்
சாத்தானை விரட்டும் பொறுப்பை
சாட்டிடு நீ என்மேல் என்றான்           
                                                     ( நாயகனே)
திருமறையை நாடிடு என்றான்
தினம் தினம் அதை ஓதிடு என்றான்
 திருமறையை ஓதுவதாலே
திருப்பொருத்தம் பெறுவீர் என்றான் 
                                                          (நாயகனே)
ரஹ்மானும் நானே என்றான்
ரட்சகனும் நானே என்றான்
ரஹ்மான் என் ரஹ்மத்தாக
ரசூலைத்தான் தந்தேன் என்றான்
                                                              ( நாயகனே)
நபிநாதரை நேசி என்றான்
நபி வாழ்க்கை வாசி என்றான்
நபிநாதர் பெயரால் என்னில்
நன்மைகளை யாசி என்றான்
                                                               ( நாயகனே)
அல்லாஹ்வை நினைத்திடு என்றான்
அவன் பெயரை உரைத்திடு என்றான்
அல்லாஹ்வை நினைப்பதினால்தான்
அமைதியுறும் உள்ளம் என்றான்
                                                                   ( நாயகனே)
பணிவுடனே வாழு என்றான்
பண்புகளை வளர்திடு என்றான்
பணிவுடனே வாழ்வதினாலே
பலமடங்கு உயர்வே என்றான்
                                                                             ( நாயகனே)
பெருமைதனை களைந்திடு என்றான்
பொறுமைதனை அணிந்திடு என்றான்
பெறுமை கொள்ளும் மனிதனை யெல்லாம்
பெரும் நெருப்பில் நுழைப்பேன் என்றான்
                                                              ( நாயகனே)
மலையளவு பாவம் என்றான்
மனிதா நீசெய்தாய் என்றான்
மகமூதர் பரிந்துரை பொருட்டால்
மன்னிப்பை தருவேன் என்றான்
                                                                    ( நாயகனே)
மரணம் வரும் வேளை என்றான்
மலக்குல் மவ்த் வருவார் என்றான்
மரணிக்கும் முன்னால் நஃப்ஸை
மரணிக்கச் செய்வாய் என்றான்         
                                                                          ( நாயகனே)
கஃபாவினுல் நானில்லை என்றான்
கல்லுக்குள்ளும் நானில்லை என்றான்
கஃபாவின் நாயகன் எனையே
கல்புக்குள்ளே தேடு என்றான்! ( நாயகனே)